Home இந்தியா தமிழ் நாடு: ஆந்திரா காவல் துறையினரால் முகிலன் கைது செய்யப்பட்டார்!

தமிழ் நாடு: ஆந்திரா காவல் துறையினரால் முகிலன் கைது செய்யப்பட்டார்!

699
0
SHARE
Ad

சென்னை: சமூக செயற்பாட்டாளர் முகிலன் ஆந்திரா காவல் துறையினர் பிடியில் சிக்கியிருப்பதாக காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.  திருப்பதி இரயில் நிலையத்தில் முகிலன் கோஷமிட்டபடி காவல் துறையினர் இழுத்து செல்லும் காணொளி சமூகத் தளங்களில் வெளியாகியுள்ளது.

மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து சிறை வாசம் அனுபவித்தவர் முகிலன். ஜல்லிக்கட்டுப் புரட்சியின் போது காவல் துறையினரின் கொடூர அடக்குமுறைக்குள்ளானவர்.  

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரமாக பங்கேற்றவர். தூத்துக்குடியில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்திய போராட்டங்களிளும் அவர் பங்கேற்றார்.

#TamilSchoolmychoice

தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டது திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்திய முகிலன், திடீரென காணாமல் போனார்.

அவரது நிலைமை என்னவென்பது யாருக்கும் தெரியாத நிலையில் பல கேள்விகள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மேலும், தற்போது அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.