Home நாடு மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்து விளக்க மகாதீருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!- அன்வார்

மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்து விளக்க மகாதீருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!- அன்வார்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளுக்கும் கதவைத் திறப்பதற்கான தனது அழைப்பை விளக்க பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அண்மையில், பக்காத்தான் ஹாராப்பானின் கூட்டணிக் கட்சிகளின் அனுமதியின்றி எல்லா மலாய்க் கட்சிகளையும் பெர்சாத்துவில் இணைக்க அறிக்கை அளித்த மகாதீரின் நடவடிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

பக்காத்தான் ஹாராப்பானின் சந்திப்புக் கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற இருப்பதால் இது குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த ஜூலை 5-ஆம் தேதி, மலாய்க்காரர்களின் அரசியலை பலப்படுத்துவதற்கு நாட்டிலிருக்கும் முக்கிய மலாய் அரசியல் கட்சிகளை பெர்சாத்துவுடன் இணையுமாறு மகாதீர் அழைப்பு விடுத்திருந்தார்.