Home நாடு அம்னோ உட்பட எல்லா மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்துவுடன் ஒன்றிணைய மகாதீர் அழைப்பு!

அம்னோ உட்பட எல்லா மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்துவுடன் ஒன்றிணைய மகாதீர் அழைப்பு!

886
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய்க்காரர்களின் அரசியல் அதிகாரத்தை ஒன்றிணைக்கும் முயற்சியாக  அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளையும் பெர்சாத்து கட்சியில் இணையுமாறு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஹாரி ராயா விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரும் பெர்சாத்து கட்சியின் தலைவருமான டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்திருந்தார்.

பல்வேறு மலாய் அரசியல் கட்சிகளின் இருப்பினால் வருகிற தேர்தல்களில் பெர்சாத்து கட்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த காலத்தில், மலாய்க்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு கட்சி, அம்னோ, ஆயினும், பதவிக்கான பேராசை காரணமாக, இன்று மலாய்க்காரர்கள் ஆறு (கட்சிகளாக) பிரிந்துள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஜோகூரில் அம்னோவின் தோல்வியின் அத்தியாயத்தை பெர்சாத்து கட்சியினர் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார். 

கட்சி எவ்வளவு வலுவானதாக இருந்தாலும், அக்கட்சிக்குள் பூசல்கள் இருந்தால், அதுபலவீனமாக மாறிவிடும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும், கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கட்சிக்கும் அதன் போராட்டத்திற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும், பதவிகளுக்கு ஆசைப்பட்டு கட்சியின் நிலைத்தன்மையை தகர்த்து விடக்கூடாது என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.