இதற்காக கடந்த ஜூன் 25-ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நஜிப்புக்கு எதிரான வழக்கொன்றை மலேசிய வருமான வரி இலாகா பதிவு செய்துள்ளது.
நஜிப் செலுத்த வேண்டிய வரிகளின் தொகைகளைக் குறிப்பிட்டு அவற்றை செலுத்த வேண்டுமென நஜிப்புக்கு அறிவிப்புக் கடிதம் ஒன்றை வருமான வரி இலாகா அனுப்பியதாகவும் ஆனால் அதற்கு நஜிப் பதில் எதையும் வழங்காத காரணத்தால் நீதிமன்ற நடவடிக்கை தொடக்கப்பட்டதாகவும் அரசாங்கம் தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஜூலை 8-ஆம் தேதி இந்த வழக்கு முதல் விசாரணைக்கு வருகிறது.
Comments