Home உலகம் கிரிக்கெட் : நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் நுழைகிறது

கிரிக்கெட் : நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் நுழைகிறது

1208
0
SHARE
Ad

இலண்டன் – இங்கு நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் நியூசிலாந்து நான்காவது நாடாக அரையிறுதி சுற்றில் நுழைகிறது.

ஏற்கனவே, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் அரையிறுதி சுற்றுக்குத் தேர்வாகிவிட்டன.

இதற்கிடையில் நாளை சனிக்கிழமை இந்தியாவும், இலங்கையும் விளையாடுகின்றன. இந்தியா இந்த ஆட்டத்தில் தோல்வியுற்றாலும் அதன் அரையிறுதிச் சுற்றுக்கான தேர்வில் எந்தப் பாதிப்பும் நேரப் போவதில்லை.

#TamilSchoolmychoice

நான்காவது நாடாக அரையிறுதிச் சுற்றுக்குச் செல்லப் போவது பாகிஸ்தானா நியூசிலாந்தா என்ற இழுபறி நீடித்து வந்தது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான்-வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த தடவையோடு சேர்த்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலகக் கிண்ணப் போட்டிகளில் நான்கு தடவைகள் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது.

எதிர்வரும் ஜூலை 9-ஆம் தேதி நியூசிலாந்து முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அல்லது இந்தியாவைச் சந்திக்கும். நியூசிலாந்துடன் விளையாடப் போகும் நாடு என்பது நாளை சனிக்கிழமை அனைத்து முதல் சுற்று ஆட்டங்களும் முடிவடைந்த பின்னர் நிர்ணயிக்கப்படும்.