பினாங்கு, ஏப்ரல் 4 – இன்று காலை 9.30 மணியளவில் கலைக்கப்படுவதாய் இருந்த பினாங்கு மாநில சட்டமன்றத்தை வருகிற வெள்ளிக்கிழமை கலைக்க, அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங், ஆளுநர் துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் படி, மக்கள் கூட்டணி அரசின் கீழ் இயங்கும் நான்கு மாநில சட்டமன்றங்களும் வரும் வெள்ளிக்கிழமை ஒரே நேரத்தில் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி லிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பினாங்கு சட்டமன்றத்தை நாளை (வெள்ளிக்கிழமை) கலைக்க தாம் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இன்று கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் மக்கள் கூட்டணியின் தலைமைக் குழுவுடனான கூட்டத்தில் கலந்துகொள்ள தாம் விரைந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் லிம் குவான் விடுத்த கோரிக்கையை, ஆளுநர் ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்த தகவலை, லிம் அந்த அறிக்கையில் தெரிவிக்கவில்லை.