Home உலகம் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை

ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை

537
0
SHARE
Ad

imagesஅபுதாபி, ஏப். 4- ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர். கோலாலம்பூரில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7 தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்.