Home கலை உலகம் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன்! சுவாதி

வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன்! சுவாதி

563
0
SHARE
Ad

indexசென்னை, ஏப்.4- சுப்ரமணியபுரம் படம் மூலம் டைரக்டர் சசிகுமாரால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சுவாதி. இப்படத்தில் வரும் கண்கள் இரண்டால்… பாட்டு மூலம் தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழில் போராளி படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்பு எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. தெலுங்கில் மட்டும் அவ்வப்போது சிறிய வேடங்களில் த‌லை காட்டி வந்தார். இந்நிலையில் தான் ரொம்பவும் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சுவாதி கூறியுள்ளதாவது, சினிமாவில் நான் ஒன்றும் பெரிதாக சம்பாதிக்கவில்லை. சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் நடுத்தர குடும்ப சூழ்நிலையில் தான் இருக்கிறேன். என்னிடம் ஆடம்பர கார் கிடையாது, ஆடம்பர பங்களா கிடையாது; சிறிய வீட்டில் தான் வசித்து வருகிறேன். தந்தையின் வருவாயில் தான் குடும்பம் நடக்கிறது, இதனால் கஷ்டப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.