Home One Line P2 காப்பி சந்தையில் புதிய வரவு கோஸ்தா காப்பி – ஒரு நாளைக்கு 100 இலவச காப்பி...

காப்பி சந்தையில் புதிய வரவு கோஸ்தா காப்பி – ஒரு நாளைக்கு 100 இலவச காப்பி பானங்கள் வழங்குகிறது

851
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – உலகம் எங்கும் காப்பி துரித உணவகக் கலாச்சாரம் வெகு விரைவாகப் பரவி வருகிறது. மலேசியாவிலும் ஸ்டார்பக்ஸ், காப்பி பீன் போன்ற காப்பி பானத்தை மையமாகக் கொண்ட துரித உணவகங்கள் ஏராளமாக இருக்கின்றன.

அண்மைய ஆண்டுகளில் மலேசியாவில் காப்பி உணவக சந்தையில் புதிதாக நுழைந்திருக்கும் உணவகத் தொடர் கோஸ்தா காப்பி (Costa Coffee). பிரிட்டனில் மிகப் பிரபலமாக இருக்கும் இந்த உணவகத் தொடர் மலேசியாவில் கால்பதித்து, முதல் கட்டமாக ஷெல் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்களில் தனது உணவகத்தை அமைத்து மலேசியர்களிடையே பிரபலம் பெற்றது.

தற்போது மிகப் பெரிய வணிக வளாகங்கள், அங்காடி வளாகங்களில் தனது உணவகங்களைத் திறந்து வரும் கோஸ்தா காப்பி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரபல அங்காடி வளாகமான சன்வே பிரமிட்டில் தனது புதிய உணவகத்தைத் திறந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, பங்சார் ஷாப்பிங் சென்டர், பிரிக்பீல்ட்ஸ் நியூ சென்ட்ரல், மினாரா அலையன்ஸ் ஆகிய இடங்களில் இயங்கி வரும் கோஸ்தா காப்பி தனது அடுத்த புதிய தொடர் உணவகத்தை சன்வே பிரமிட்டில் தொடங்கியிருக்கிறது. சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செயல்படும் இந்த உணவகம் ஏற்கனவே இருக்கும் 6 உணவகங்களில் மிகப் பெரியதாகும்.

சன்வே பிரமிட் உணவகத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு – தங்களின் காப்பியின் சுவையை இதுவரை அறியாதவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு – நாள் ஒன்றுக்கு முதலில் வரும் 100 பேர்களுக்கு இலவசமாக காப்பி பானத்தை வழங்கவிருக்கிறது கோஸ்தா காப்பி. இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) தொடங்கி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) வரைதான் இந்த சலுகை அமுலில் இருக்கும்.

இதுவரையில் 6 உணவகங்களை சுமார் 6 மில்லியன் ரிங்கிட் செலவில் திறந்திருக்கும் கோஸ்தா காப்பி அடுத்த 5 ஆண்டுகளில் 65 தொடர் உணவகங்களைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறது.