Home வணிகம்/தொழில் நுட்பம் கோக்கா கோலாவின் காப்பி போர்!

கோக்கா கோலாவின் காப்பி போர்!

1201
0
SHARE
Ad

இலண்டன் – உலகின் மிகப் பெரிய குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோக்கா கோலா காப்பி பானம் தயாரிப்பு விற்பனைத் துறையிலும் தனது அதிரடி ஆதிக்கத்தைச் செலுத்த ஆயத்தமாகி வருகிறது.

காப்பி உணவகத் துறையில் முன்னணி வகிக்கும் ஸ்டார் பக்ஸ் நிறுவனத்துடன் போட்டிபோடும் நோக்கில் பிரிட்டனின் கோஸ்தா காப்பி உணவகத் தொடரை கோக்கா கோலா 5.1 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

கோஸ்தா காப்பி உலகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் கிளைகளைக் கொண்டிருக்கின்றது. மலேசியாவிலும் பல கிளைகளைக் கொண்டிருக்கும் கோஸ்தா காப்பி, ஷெல் பெட்ரோல் நிலையத்துடன் இணைந்து கிளைகளை அமைக்கின்ற காரணத்தால், பல ஷெல் பெட்ரோல் விற்பனை மையங்களில் கோஸ்தா காப்பி உணவகமும் மலேசியாவில் இணைக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கோஸ்தா காப்பியை வாங்குவதன் மூலம் உலகம் முழுவதும் விரிவடைந்து வரும் காப்பி பானத்துக்கான வணிகத்தில் நுழைவதுடன் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்காத பானங்களை விற்பனை செய்யும், உற்பத்தி செய்யும் தொழில்களில் கோக்கா கோலா தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

மதிப்பிடப்பட்ட விலையை விட 1.3 பில்லியன் டாலர் கூடுதலாகச் செலுத்தி கோஸ்தா காப்பி நிறுவனத்தை கோக்கா கோலா கொள்முதல் செய்துள்ளது. தனது விநியோகக் கட்டமைப்பைக் கொண்டு, கோஸ்தா நிறுவனத்தை பலப்படுத்துவதே கோக்கா கோலாவின் நோக்கமாகும். 77 நாடுகளின் சந்தைகளில் 29 ஆயிரம் கிளைகளோடு இயங்கி வரும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் போட்டி போட கோக்கோ கோலா-கோஸ்தா காப்பி இணைந்த கூட்டணி பெருமளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்பக்ஸ் நிறுவனம், நெஸ்லே நிறுவனத்துடன் இணைந்து 7 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகக் கூட்டணியை அமைத்திருக்கும் நிலையில், கோக்கா கோலாவின் காப்பி போர் தொடங்கியுள்ளதாக வணிக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.