Home கலை உலகம் ஷங்கரின் “இந்தியன்-2” : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து இணைகிறார்கள்

ஷங்கரின் “இந்தியன்-2” : ஜெயமோகன், கபிலன் வைரமுத்து இணைகிறார்கள்

1081
0
SHARE
Ad

சென்னை – தனது அடுத்த படைப்பான எந்திரன் 2.0 எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பின்னணி தொழில்நுட்ப பணிகள் இறுதிக் கட்டமாக நடைபெற்று வரும் வேளையில், இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் 2″ படத்தை வடிவமைக்கும் பணிகளிலும், படப்பிடிப்பைத் தொடக்கும் முன்னேற்பாடுகளிலும் இறங்கியுள்ளார்.

முதல் கட்டமாக கதை, திரைக்கதை, வசனங்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் மூன்று முன்னணி எழுத்தாளர்களை ஷங்கர் ஒருங்கிணைத்துள்ளார். இந்தியன்-2 படத்தில் ஜெயமோகன் இணைவது உறுதியாகியிருக்கும் நிலையில் தற்போது கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்துவும் படக் குழுவில் இணைகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என எழுதியுள்ள இலட்சுமி சரவணக்குமார் என்ற இளம் எழுத்தாளரும் இந்தியன்-2 படக் குழுவில் இணைந்துள்ளார்.

இதற்கிடையில் ஷங்கர் இந்தியன்-2 படத்துக்காக படப்பிடிப்பு நடக்கும் இடங்களைப் பார்வையிட்டுத் தேர்வு செய்ய, ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் ஆந்திரா சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

இலண்டனின் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்திப்பட நடிகர் அஜய் தேவகனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தியன்-2 தயாராகிறது.