இதனைத் தொடர்ந்து ஸ்டார்பக்ஸ் உணவுப் பொருட்களை பேரங்காடிகள், உணவகங்கள், உணவு விநியோக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நெஸ்லே விற்பனை செய்யும்.
தனது சொந்த காப்பி பானமாக நெஸ்காபி வணிக முத்திரை கொண்ட காப்பித் தூளை நெஸ்லே ஏற்கனவே விற்பனை செய்து வருகின்றது.
கூடவே, தற்போது ஸ்டார்பக்ஸ் உணவுப் பொருட்களையும் விற்பனை செய்வதன் மூலம் அமெரிக்காவில் மேலும் வலுவுடன் காலூன்ற நெஸ்லே எண்ணம் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான் 7.15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை ரொக்கமாக செலுத்த அந்நிறுவனம் முன்வந்திருக்கிறது.
நெஸ்லே மற்றொரு போட்டி காப்பி நிறுவனத்துடன் இணைவது இதுவே முதல் முறையாகும்.