Home வணிகம்/தொழில் நுட்பம் ஸ்டார்பக்சில் கேன்சர் எச்சரிக்கை அவசியம் – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு!

ஸ்டார்பக்சில் கேன்சர் எச்சரிக்கை அவசியம் – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு!

1244
0
SHARE
Ad
லாஸ் ஏஞ்சல்ஸ் – ஸ்டார்பக்ஸ் உட்பட முன்னணி காபி நிறுவனங்கள், தங்களது பொருட்களின் அட்டைகளில் புற்றுநோய் (கேன்சர்) எச்சரிக்கை வாசகத்தைக் கொண்டிருக்க வேண்டும் என கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
காரணம், காபி கொட்டைகளை வறுக்கும் முறையில் பல்வேறு இரசாயணப் பொருட்கள் கலக்கப்படுவதால் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி எலிஹி பெர்லே கடந்த புதன்கிழமை வெளியிட்ட தீர்ப்பில் கூறியிருப்பதாவது, காபி நிறுவனங்கள், தங்களது காபி வறுக்கும் முறைகளில், கார்சினோஜென் இரசாயணம் வெளிப்படுவதை தெரிவிக்காதது, எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாதது போல் உள்ளது.”தற்காப்பவர்கள் (காபி நிறுவனங்கள்), காபி அருந்துவது மனிதனுக்கு நல்லது என்பதை ஒப்புக் கொள்வதற்குத் தேவையான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், அது போல் காபி கொட்டைகளை வறுக்கும் போது அதன் நறுமணத்திற்காக இயல்பாகவே அந்த வகை இரசாயணங்கள் இருக்கத் தான் செய்யும் என்றும், அது உடலுக்குத் தீங்கில்லாத வகையில் தான் உள்ளது என்றும் காபி நிறுவனங்கள் தமது தரப்பில் கூறியிருக்கின்றன.

இதனிடையே, ஸ்டார்பக்ஸ் மற்றும் மற்ற காபி நிறுவனங்கள் இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஏப்ரல் 10-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

 

#TamilSchoolmychoice