Home நாடு தேர்தலில் திருநங்கைகளும் வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் தகவல்!

தேர்தலில் திருநங்கைகளும் வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம் தகவல்!

840
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் திருநங்கைகளும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பெண்ணாக வருபவரின் அடையாள அட்டையில் ஆண் என்று இருக்கும் பட்சத்திலும் அவர்களால் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அகாடமிப் பதிவாளர் நிக் அமினுடின் நிக் ஷாகார் ஷா தெரிவித்திருக்கிறார்.

எனினும், அவ்வாறான வாக்காளர்கள், வாக்கு மையத்தில் உள்ள அதிகாரியிடம் விளக்கமளித்து, பாரம் 11-ஐப் பெற்று அதைப் பூர்த்தி செய்து கொடுத்தால், தேர்தல் அதிகாரி வாக்களிக்க அனுமதி வழங்குவார் என்றும் நிக் அமினுடின் நிக் ஷாகார் ஷா குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த நடைமுறை, அடையாள அட்டையில் உள்ள நபரும், வாக்களிக்க வந்திருக்கும் நபரும் ஒருவரே தானா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான் என்றும் நிக் அமினுடின் தெரிவித்திருக்கிறார்.