Home கலை உலகம் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்!

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்!

972
0
SHARE
Ad

மும்பை – ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று வெள்ளிக்கிழமை மும்பையில் சந்தித்தார்.

இந்நிலையில், அது குறித்தத் தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் கமல்ஹாசன், “திரு கிறிஸ்டோபர் நோலனைச் சந்தித்தேன். அவரது ‘டன்கிரிக்’ திரைப்படத்தை டிஜிட்டலில் பார்த்தற்காக வருத்தம் தெரிவித்தேன். அதற்குப் பதிலாக ஹேராம் திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பை அவரிடம் கொடுத்தேன். ஆச்சரியம் என்னவென்றால் அவர் பாபநாசம் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஹாலிட்வுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ‘ஃபாலோயிங்’, ‘மெமன்ட்டோ’, ‘டார்க் நைட் ட்ரையாலஜி’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘டன்கிரிக்’ ஆகிய விருது பெற்ற படங்களை இயக்கியவர்.

#TamilSchoolmychoice

அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘டன்கிரிக்’ திரைப்படம், ஒலிக்கலப்பு, ஒலித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.