Home உலகம் ஆர்னால்டுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றி!

ஆர்னால்டுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றி!

791
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – உலகப்புகழ் பெற்ற ஆணழகனும், ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான ஆர்னால்டு ஸ்வாசனெகருக்கு (வயது 70) கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள செடார்ஸ் சினாய் மருத்துவமனையில், இறுதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தான் புத்துணர்ச்சியுடன் திரும்பியிருப்பதாக ஆர்னால்டு தெரிவித்திருக்கிறார்.

இருதயக் கோளாறு காரணமாக, கடந்த 1997-ம் ஆண்டு, ஆர்னால்டின் இருதயத்தில் பொருத்தப்பட்ட பல்மோனிக் வால்வின் கால அவகாசம் நிறைவு பெற்றதையடுத்து, அது அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டு புதிய கருவி பொருத்தப்பட்டதாக ஆர்னால்டின் செய்தித் தொடர்பாளர் டேனியல் கெட்செல் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், இது அவசர சிகிச்சை இல்லை என்றும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை தான் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.