Home Featured உலகம் “காலம் எப்படி மாறிவிட்டது?” – ஆர்னால்ட் பேஸ்புக்கில் கிண்டல்!

“காலம் எப்படி மாறிவிட்டது?” – ஆர்னால்ட் பேஸ்புக்கில் கிண்டல்!

743
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பேஸ்புக்கில் எப்போதும் பரபரப்பாக இருப்பவர் ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான ஆர்னால்ட் ஸ்வாசனெகர். காலையில் ஓட்டப்பயிற்சி செல்வது முதல் இரவு உணவு சாப்பிடுவது வரை தனது செயல்களை அடிக்கடி பேஸ்புக்கில் பதிவு செய்து தனது ரசிகர்களோடும், ஆதரவாளர்களோடும் எப்போதும் நெருக்கமாகவே இருந்து வருகின்றார்.

Arnold

இந்நிலையில், நேற்று ஆர்னால்ட் பதிவு செய்த புகைப்படம் ஒன்று அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. கட்டுடலோடு இளமையாக காட்சியளிக்கும் தனது சிலை அருகே படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள ஆர்னால்ட், “காலம் எப்படி மாறிவிட்டது?” என்று தன்னையே கிண்டலும் செய்து அதை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

இதை விட இன்னும் நகைச்சுவை அளிக்கும் வகையில் பல பதிவுகள் அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.