Home Featured கலையுலகம் “கிண்டல் எல்லை மீறி போய்விட்டது” – ரஜினிமுருகன் மீது லஷ்மி காட்டம்!

“கிண்டல் எல்லை மீறி போய்விட்டது” – ரஜினிமுருகன் மீது லஷ்மி காட்டம்!

742
0
SHARE
Ad

lakshmi-ramakrishnan45சென்னை – “என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா” பாடலால், ரஜினி முருகன் படக்குழுவினருக்கும், நடிகை லஷ்மி இராமகிருஷ்ணனுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சனை ஏற்கனவே தெரிந்த கதை தான் என்றாலும், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ‘ரஜினி முருகன்’ திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி அதை மேலும் சூடேற்றியுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா?” பாடல் பற்றி அந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்ட போது, அப்பாடல் ஒரு கிண்டல் நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்றும் பதிலளித்துள்ளார்.

Rajni-murugan-sivakarthigeyan-Sooriஇதனால் மிகவும் ஆத்திரமடைந்துள்ள இயக்குநரும் நடிகையுமான லஷ்மி இராமகிருஷ்ணன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனை பொறிந்து தள்ளிவிட்டார்.

#TamilSchoolmychoice

“என்னம்மா இப்படிப் பன்றீங்களேம்மா” என்ற வசனத்தை வணிக ரீதியாக உபயோகப்படுத்திவிட்டு, எனது வசனத்தைக் கூறி என்னை கேலி செய்த அந்த தனியார் தொலைக்காட்சியின் கிண்டல் நிகழ்ச்சிக்கே கிரடிட் வழங்குவதா? அது ஒரு சிறந்த செயலா?”

“கிண்டல் எல்லை மீறிப் போய்விட்டது. என்னை மிகவும் பாதித்துவிட்டது. உண்மையான வசனத்திற்கு கிரடிட் கொடுத்தால் நான் எனது உரிமையைக் கூறி பணம் கேட்டுவிடுவேனா? கவலைப்படாதீர்கள் சிவகார்த்திகேயன். எனக்கு அதை விட நிறைய வேலைகள் இருக்கிறது” என்று லஷ்மி சிவகார்த்திகேயனை சாடியுள்ளார்.