Home One Line P2 சிவகார்த்திகேயன் வெளியிட்ட “Thousand Kisses” தனிப்பாடல் – மக்களிடையே வரவேற்பு

சிவகார்த்திகேயன் வெளியிட்ட “Thousand Kisses” தனிப்பாடல் – மக்களிடையே வரவேற்பு

1033
0
SHARE
Ad

சென்னை : கடந்த ஜனவரி 25-ஆம் தேதி சென்னையில் “ஆயிரம் முத்தங்கள்” -“Thousand Kisses” – எனும் தனிப் பாடல் காணொலியை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து இந்தப் பாடல் மக்களிடைய பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெறும் இரண்டு பொம்மைகளை வைத்துக் கொண்டு படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சி, நடிகர் சேரன், ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பல திரைத்துறையினரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சமூக ஊடகங்களில் பெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

இந்தப் பாடல் காணொலியை டிமல் எட்வர்ட்ஸ் சேவியர் இயக்கி ஒளிப்பதிவு செய்ய, பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ’இனிமே இப்படித்தான்’, ’கட்டப்பாவ கானோம்’ போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளரான இவர், 2018ஆம் ஆண்டில் 7-Up மெட்ராஸ் கிக் தயாரிப்பில் இசையமைத்த “ராட்டி” எனும் ஒரு பாடல் காணொலியும் மலேசியா உட்பட உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. தற்போது சில தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் இவர், விரைவில் ஒரு மலேசிய திரைப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

கோவிட்-19 காரணமாக சென்னையில் நடந்த முழு அடைப்பின் போது, இந்த “Thousand Kisses” பாடல் காணொலிக்கு 39 நாட்களுக்கு தனது வீட்டிலேயே படப்பிடிப்பு நடத்தியதாகவும், காட்சிகள் முழுவதையும் தாம் ஒருவராகவே கைபேசி கேமராவில் ஒளிப்பதிவு செய்ததாகவும் டிமல் தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் காணொலியை பிரபல இசை நிறுவனமான “Think Music” வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் காணொலியை மேற்கண்ட யூடியூப் இணைப்பில் காணலாம்.

இந்தப் பாடல் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டும் மற்றொரு காணொலியையும் திங் மியூசிக் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த உருவாக்க (மேக்கிங்) காணொலியை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: