Home Video ‘அமரன்’ – தீபாவளி வெளியீடு – இந்திய இராணுவ வீரரின் கதை!

‘அமரன்’ – தீபாவளி வெளியீடு – இந்திய இராணுவ வீரரின் கதை!

121
0
SHARE
Ad

சென்னை : தீபாவளிக்கு பிரம்மாண்டமான தமிழ்ப் படங்கள் வெளிவருவது எப்போதுமே சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்த முறை தீபாவளிக்கு உலகம் எங்கும் தமிழ்ப் பட இரசிகர்களை மகிழ்விக்க வெளியாகும் படம் ‘அமரன்’.

சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் சாய் பல்லவி கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருப்பது இன்னொரு சிறப்பு. ராஜ்கமல் பெரியசாமி இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ‘ரங்கூன்’ படத்தை இயக்கியவர்.

அமரன் படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் கமல்ஹாசன் அதனால் மகிழ்ந்து இயக்குநருக்கு பேசிய சம்பளத்தை விடக் கூடுதலாக வழங்கியிருப்பதாகவும் தகவல். இந்திய இராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் கதை இது எனக் கூறப்படுகிறது. இறுதியில் அவர் இறந்து விடுவார் என்பது உண்மை சம்பவம். அதனை அப்படியே எடுத்திருக்கிறார்களா – அல்லது சிவகார்த்திகேயன் அந்தக் கதாபாத்திரத்தில் இறந்து விடுவதுபோல் காட்டாமல் – வேறுவிதமாக திரைக்கதையை மாற்றியமைத்திருக்கிறார்களா என்ற ஆர்வம் சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

அமரன் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட 3 நாட்களில் இதுவரை 7.4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் யூடியூப் தளத்தில் மட்டும் பார்த்துள்ளனர்.அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: