Home உலகம் அமெரிக்காவில் மாயமான கேரள குடும்பம் – யேல் நதியில் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது!

அமெரிக்காவில் மாயமான கேரள குடும்பம் – யேல் நதியில் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது!

1333
0
SHARE
Ad

வாஷிங்டன் – கேரளாவைச் சேர்ந்த சந்தீப் தொட்டப்பில்லி (வயது 41) என்பவர், தனது மனைவி சவுமியா (வயது 38), மகன்கள் சித்தாந்த் (வயது 12), சாச்சி (வயது 9) ஆகியோருடன் அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் வசித்து வந்தார்.

வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த சந்தீப், விடுமுறையைக் கழிப்பதற்காக தெற்கு கலிபோர்னியாவின் சான் ஜோசில் உள்ள தனது நண்பர் வீட்டிற்குச் செல்ல தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார்.

ஆனால், சொன்னபடி சந்தீப் தமது வீட்டை வந்தடையாததால், அவரது நண்பர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மாயமான சந்தீப்பையும் அவரது குடும்பத்தினரையும் மீட்புக் குழுவினர் தேடத் தொடங்கினர்.

இதனிடையே, கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக யேல் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், யேல் நதியில் கார் ஒன்று மிதப்பதோடு, பெண்ணின் உடலும் கண்டறியப்பட்டிருக்கிறது.

அது சந்தீப்பினுடைய காரா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், யேல் நதியில் மேலும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.