Home உலகம் டொனால்டு டிரம்பின் மருமகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்!

டொனால்டு டிரம்பின் மருமகள் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்!

957
0
SHARE
Ad

வாஷிங்டன் – டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் மனைவியான வானசா டிரம்ப், விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

முன்னாள் நடிகையும், அழகியுமான வானசா டிரம்பும், டொனால்ட் டிரம்ப் ஜூனியரும் இது குறித்து வியாழக்கிழமை ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றனர்.

“12 ஆண்டுகால எங்களின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இப்போது நாங்கள் இருவரும் தனியாகப் பிரிந்து செல்ல விரும்புகிறோம்” என்று இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த 2005-ம் ஆண்டு, திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

டிரம்ப் ஜூனியர், வானசாவின் இந்த திடீர் முடிவிற்கு காரணம் என்னவென்று இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது.

கடந்த மாதம், தங்களின் இல்லத்திற்கு வந்த கடிதம் ஒன்றைப் பிரித்த வானசா, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்கடிதத்தில் வெள்ளை நிறப் பொடி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.