Home உலகம் கடிதத்தில் வந்த விஷக்கிருமி: டிரம்ப் மருமகள் மருத்துவமனையில் அனுமதி!

கடிதத்தில் வந்த விஷக்கிருமி: டிரம்ப் மருமகள் மருத்துவமனையில் அனுமதி!

1228
0
SHARE
Ad

Vanesa Trumpமான்ஹாட்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியரின் மனைவியான வனெசா டிரம்ப், திங்கட்கிழமை காலை தனது வீட்டு முகவரிக்கு வந்த கடிதம் ஒன்றைப் பிரித்திருக்கிறார். அதனுள் வெள்ளைப் பொடி ஒன்று இருந்திருக்கிறது.

இதனையடுத்து, வெனசா திடீரென மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி அவர் மயங்கி விழுந்திருக்கிறார். அவருடன் அவரது குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், “வனெசாவும், எனது குழந்தைகளும் நலம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மிக்க நன்றி. இன்று காலை மிக மோசமான சூழல் நிலவியது. எதிர்கருத்து உடையவர்கள் இது போன்ற கேவலமான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துவதைப் பார்க்கும் போது அறுவெறுப்பாக இருகின்றது” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, கடிதத்தில் இருந்த வெள்ளைப் பொடி, அபாயகரமான ஆந்த்ராக்ஸ் கிருமியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்திருக்கிறது. அது குறித்து நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.