Home நாடு பிரபல மலேசியத் தீயணைப்பு வீரர் பாம்பு கடித்து மரணம்!

பிரபல மலேசியத் தீயணைப்பு வீரர் பாம்பு கடித்து மரணம்!

860
0
SHARE
Ad

கோலாலம்பூர் -மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப்படையைச் சேர்ந்தவரும், பிரபல பாம்புபிடி வீரருமான அபு சாரின் (வயது 33), நல்ல பாம்பு கடித்து, சிகிச்சைப் பலனின்றி, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையில் ராஜநாகம் போன்ற கொடிய விஷமுள்ள பாம்புகளைப் பிடிப்பதற்கென்றே தனிப்பிரிவு இருக்கின்றது.

அவர்களில் மிகப் பிரபலமான பாம்பு பிடிக்கும் வீரராக இருந்து வந்தவர் அபு சாரின் ஹுசைன்.

#TamilSchoolmychoice

தெமர்லோ தீயணைப்பு மற்றும் மீட்புப் படையைச் சேர்ந்த அபு சாரின், கடந்த 2016-ம் ஆண்டு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தால் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.

தாய்லாந்து ஆடவர் ஒருவர் இறந்து போன காதலியின் நினைவாகப் பாம்பைத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக அச்செய்தி, அபு சாரின் ராஜநாகம் ஒன்றுடன் இருக்கும் புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது.

அச்செய்தியை மறுத்த அபு சாரின், தீயணைப்புப் படைப்பிரிவில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு அரிய வகை ராஜநாகத்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் அவை என விளக்கமளித்தார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை பெந்தோங்கில் நல்ல பாம்பு ஒன்றைப் பிடிக்கப் போன போது, அப்பாம்பு அவரைக் கடித்தது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 12.40 மணியளவில் அபு சாரின் மரணமடைந்தார்.

அபு சாரினின் மரணம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.