Home நாடு “நஜிப்பிடம் ஒதுங்கி இருங்கள்” – ஆஸ்திரேலியப் பிரதமருக்கு மகாதீர் அறிவுரை!

“நஜிப்பிடம் ஒதுங்கி இருங்கள்” – ஆஸ்திரேலியப் பிரதமருக்கு மகாதீர் அறிவுரை!

1071
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த வார இறுதியில் சிட்னியில் நடைபெறவிருக்கும் ஆசியான் – ஆஸ்திரேலியா சிறப்பு மாநாட்டில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கோம் டர்ன்புல், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்திப்பதை நிறுத்த வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு மகாதீர் அளித்திருக்கும் பேட்டியில், நஜிப் இது போன்ற நிகழ்ச்சிகளில் உலகத் தலைவர்களுடன் படம் பிடித்துக் கொள்வார் என்றும், அதன் மூலம் நஜிப் தனது மதிப்பை உயர்த்திக் கொள்வார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

எனவே, டர்ன்புல் அதற்கு உதவ வேண்டாம் என்றும் மகாதீர் அறிவுருத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“புகைப்படம் எடுப்பதை அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார். காரணம், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு தலைவராகத் தான் இருப்பதைப் போல் மலேசியர்களிடம் காட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா” என்றும் மகாதீர் அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும், “ஒருவர் திருடன் எனத் தெரிந்த பின்னர், அவர் (டர்ன்புல்) அவரை (நஜிப்பை) விட்டு ஒதுங்கி இருப்பது தான் நல்லது” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.