Home உலகம் டொனால்டு டிரம்ப் போல் தோற்றம் கொண்ட பெண் – இணையத்தில் பிரபலமானார்!

டொனால்டு டிரம்ப் போல் தோற்றம் கொண்ட பெண் – இணையத்தில் பிரபலமானார்!

1156
0
SHARE
Ad

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டோலோரெஸ் லெயிஸ் என்ற விவசாயப் பெண் காலிசியாவில் உள்ள தனது உருளைக் கிழங்கு விளையும் நிலத்தில் நின்று கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்து, கடந்த ஏப்ரல் 19-ம் தேதி, இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

அவருக்குத் தெரியாது அந்தப் படம் உலகையே சுற்றி வரப்போகிறது என்று. காரணம், அப்புகைப்படத்தைப் பார்த்த இணைவாசிகள் அனைவரும் அப்பெண் அச்சு அசலாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பெண் வேடமிட்டது போல் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

ஏற்கனவே டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களை வைத்து வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்த மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு, இப்படி ஒரு புகைப்படம் கிடைத்தால் சும்மா விடுவார்களா? தற்போது இணையம் முழுவதும் டோலோரெஸ் லெயிசின் புகைப்படம் தான் வைரலாகப் பரவி வருகின்றது.