Home தேர்தல்-14 பெர்சாத்து வேட்பாளர்கள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம் – அறிக்கை தகவல்!

பெர்சாத்து வேட்பாளர்கள் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம் – அறிக்கை தகவல்!

1021
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரப் பொருட்களில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் உள்ள வரம்புகள் குறித்து தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் விளக்கமளித்திருக்கிறார்.

அதன் படி, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி சீன ஊடகம் ஒன்றிற்கு அளித்திருக்கும் தகவலில், பெர்சாத்து வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் மகாதீரின் புகைப்படத்தைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரச்சாரப் பொருட்களில் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கூடுதல் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice