Home நாடு கேவியஸ் ராஜினாமா தேசிய முன்னணிக் கட்சிகளை பாதிக்காது: டாக்டர் சுப்ரா

கேவியஸ் ராஜினாமா தேசிய முன்னணிக் கட்சிகளை பாதிக்காது: டாக்டர் சுப்ரா

959
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், பேராக் மாநில ஆலோசகர் பதவியிலிருந்தும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் விலகியது எந்த வகையிலும் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்திருக்கிறார்.

டான்ஸ்ரீ கேவியஸ் நேற்று புதன்கிழமை தனது டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், தான் மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்தும், மைபிபிபி கூட்டரசுப்பிரதேசத் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அறிக்கை விடுத்த மைபிபிபி கட்சி, கேவியஸ் ராஜினாமா செய்யவில்லை என்றும், ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கட்சித் தலைமையால் நீக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறியது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இது குறித்துக் கருத்துக் கூறிய டாக்டர் சுப்ரா, “நானும் இன்று அந்த தகவலைப் படித்தேன். அந்தத் தகவலில் இருந்து, மைபிபிபி உறுப்பினர் அவரை நீக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகின்றது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அக்கட்சிக்குள் ஏதோ உள்விவகாரம் இருக்கிறது.

“என்றாலும், அவரது பதவி விலகல் கட்சிக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது மற்றும் கட்சிக்குள் இருக்கும் அணிகளுக்கு அவர் மீது அதிருப்தி இருந்திருக்கலாம் அதனால் அவ்வாறு நடந்திருக்கும் என நம்புகின்றேன். அது தனிப்பட்ட விவகாரம்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.

மேலும், தொகுதிகளைப் பெறுவதில் ஏமாற்றங்களைச் சந்திருத்திருக்கும் மைபிபிபி உறுப்பினர்களை, மஇகா எப்படி எதிர்க்கொள்ளப் போகிறது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் சுப்ரா, “நாங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆதரவு அளித்து, தேசிய முன்னணிக்குப் பக்க பலமாக இருக்க வலியுறுத்துவோம். மைபிபிபி உறுப்பினர்களுடன் கைகோர்த்து இணைந்து பணியாற்றும்படி நான் ஈப்போ பாராட் மஇகா தொகுதித் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூ மற்றும் தங்கராணியைக் கேட்டுக் கொள்கிறேன்” என டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.