Home நாடு ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கேவியஸ் நீக்கப்பட்டார் – மைபிபிபி அறிக்கை!

ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் கேவியஸ் நீக்கப்பட்டார் – மைபிபிபி அறிக்கை!

1573
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகிவிட்டதாகவும், கடந்த திங்கட்கிழமை முதல் தனது ராஜினாமா அமலுக்கு வருவதாகவும் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்தார்.

ஆனால், மைபிபிபி கட்சி சற்று முன்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கேவியஸ் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

இது குறித்து மைபிபிபி பொதுச்செயலாளர் மோகன் கந்தசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நேற்று இரவு கட்சி தலைமை எடுத்த ஒழுங்கு நடவடிக்கையின் படி, கேவியஸ் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றது.

#TamilSchoolmychoice

“நாங்கள் எந்த ஒரு ராஜினாமா கடிதத்தையும் பெறவில்லை” என்று கந்தசாமி தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே வெளியாகியிருக்கும் மற்றொரு தகவலில், தொகுதி ஒதுக்கீட்டில் கேவியஸ் எடுத்திருக்கும் சில முடிவுகள் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் படி, தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், மைபிபிபி கட்சிக்குக் கடிதம் அனுப்பியதாகவும் கூறப்படுகின்றது.