Home நாடு தேர்தல் 14: காப்பார் எம்பி மணிவண்ணனை ஹூத்தான் மெலிந்தாங்குக்கு மாற்றிய பிகேஆர்!

தேர்தல் 14: காப்பார் எம்பி மணிவண்ணனை ஹூத்தான் மெலிந்தாங்குக்கு மாற்றிய பிகேஆர்!

1432
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ஜி.மணிவண்ணனின் பெயரை நீக்கி, அதற்குப் பதிலாக, பேராக் மாநிலம் ஹூத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி வழங்கியிருக்கிறது பிகேஆர் தலைமைத்துவம்.

மேலும், காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீத் என்ற மலாய்க்காரை நிறுத்துவதாகவும் பிகேஆர் அறிவித்திருக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், காப்பார் தொகுதியில் போட்டியிட்ட ஜி.மணிவண்ணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் சக்திவேலை விட 23,790 வாக்குகள் பெரும்பான்மையில் மொத்தம் 69,849 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice