Home உலகம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் கவலைக்கிடம்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் கவலைக்கிடம்!

1435
0
SHARE
Ad

வாஷிங்டன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ், உடல்நலக்குறைவு காரணமாக ஹான்ஸ்டன் மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

93 வயதான அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்தத்தில் தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்ததாகவும் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்சின் செய்தித் தொடர்பாளர் ஜிம் மெக்கிராத் தெரிவித்திருக்கிறார்.

இரத்தத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தொற்று உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், எனவே ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் தான், ஏப்ரல் 18-ம் தேதி தான், ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்சின் மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.