
வாஷிங்டன் – கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தனது 94-வது வயதில் காலமான அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் இறுதிச்சடங்குகள் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்று அதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
புஷ்ஷின் மறைவிற்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்பும் புஷ்ஷின் நல்லுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இத்தனை தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய புகைப்படங்களை விட, புஷ் வளர்த்த அவரது ‘சல்லி’ சோகத்துடன், கண்ணீர் சிந்தியவாறு, புஷ்ஷின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டிக்கு அருகில் படுத்திருக்கும் உருக்கமும், சோகமும் கலந்த புகைப்படம் உலகம் எங்கும் அனைவரையும் ஈர்த்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புஷ் மறைந்த அன்று அவரது செல்ல நாய் எந்தவித உணவையும் உண்ணாமல் சோகத்துடன் அவரது நல்லுடலுக்கு அருகிலேயே சோகத்துடன் படுத்திருந்தது என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
