Home நாடு தேர்தல் 14: வாக்காளர்களுக்கு இலவச பர்கர்!

தேர்தல் 14: வாக்காளர்களுக்கு இலவச பர்கர்!

1037
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9-ம் தேதி நடைபெறும் பொதுத்தேர்தலின் போது, வாக்களிப்பவர்களுக்கு இலவச பர்கர் வழங்க எபிக் பிட் மீல்ஸ் கோ என்ற நிறுவனம் முன்வந்திருக்கிறது.

வாக்களித்துவிட்டு விரலில் மையுடன் வரும் வாக்காளர்களுக்கு, தலா ஒரு இலவச பர்கர் வழங்கவிருக்கிறது.

“வாக்களிப்பதை நீங்கள் கவனித்துக் கொண்டால், உங்களை நாங்கள் இலவச பர்கர் கொடுத்து கவனித்துக் கொள்கிறோம்” என எபிக் பிட் மீல்ஸ் கோ நிறுவனம் தமது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இது போல் மேலும் பல பிரபல உணவகங்களும், பொதுத்தேர்தல் அன்று இலவச உணவு வழங்கத் திட்டமிட்டிருக்கிறது.

கிள்ளானில் உள்ள எங் சுன் பா கு தே என்ற சீன உணவகமும், நூடுல் செயின் மீட் மீ என்ற நிறுவனமும் இலவச உணவுகளை வழங்கவிருக்கின்றன.

நூடுல் செயின் மீட் மீ என்ற நிறுவனத்திற்கு தேசா செதாப்பா, டனாவ் கோத்தா மற்றும் சுங்கை லோங் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. அம்மூன்று கிளைகளிலும் இலவச உணவுகள் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.