Home கலை உலகம் ஐபிலிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆவணப்படம் 14-வது பொதுத் தேர்தலை மையப்படுத்தியுள்ளது!

ஐபிலிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆவணப்படம் 14-வது பொதுத் தேர்தலை மையப்படுத்தியுள்ளது!

2024
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இணையம் வழி கட்டணங்களுக்கு திரைப்படங்களை வினியோகிக்கும் (Video Streaming) பிரபல தளமான ஐபிலிக்ஸ் (iflix), அதன் முதல் அசல் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன் முதல் முயற்சியிலேயே, மலேசியாவில் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலில் (GE14) கவனம் செலுத்தியிருப்பது வியப்புக்குரியதாக உள்ளது.

‘பங்கிட்: 11 டேய்ஸ் தாட் சேஞ்ட் எ நேஷன் (Bangkit: 11 Days That Changed A Nation)’ என்ற தலைப்பில், கடந்த மே மாதம் 14-வது பொதுத் தேர்தலைமையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

வாக்கெடுப்பு தினத்தில் நிகழ்ந்த வியத்தகு சம்பவங்கள், சுவரொட்டிகளை அகற்றச் செய்தது போன்ற காட்சிகள் வேகமாகவும், அரசியல் பரபரப்பாகவும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக, ஐபிலிக்ஸ் நிறுவன நிகழ்ச்சிகள் இயக்குனர் மார்க் பிரான்சிஸ் கூறினார்.

செய்தி ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு, வெளியிடப்படாத காட்சிகள் மற்றும் சம்பவங்களை இந்த ஆவணப்படத்தில் இணைத்துள்ளதாக இதன் இயக்குனர், ஜஸ்தின் ஓங் கூறினார்.

மலேசியர்கள் இந்த 50 நிமிட ஆவணப்படத்தினை இலவசமாக www.iflix.com எனும் பக்கத்தில் கண்டு களிக்கலாம்.