Home நாடு “புரோட்டோன் 1” காரில் சுல்தான் இப்ராகிமும், பிரதமரும் பயணம்!

“புரோட்டோன் 1” காரில் சுல்தான் இப்ராகிமும், பிரதமரும் பயணம்!

1815
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பிரதமர் மகாதீர் முகமட் மரியாதை நிமித்தமாக, இன்று சுல்தான் இப்ராகிமை அரண்மனையில் சந்தித்தார். இதற்கு முன்னர், இருவரும் நாட்டின் மாமன்னர் விவகாரம் குறித்துப் பேச உள்ளதாக வதந்திகள் எழுந்தன. ஆயினும், தாம் வேறொரு விவகாரமாக சுல்தானைச் சந்திக்க இருப்பதாக பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.

இதற்கிடையே, சந்திப்பிற்குப் பின்னர், முதலாவதாக வெளியிடப்பட்ட புரோட்டோன் சாகா ரக வாகனத்தில், சுல்தான் அவர்கள் காரைச் செலுத்த, பிரதமரை செனாய் அனைத்துலக விமான நிலைத்திற்கு அழைத்துச் சென்றார்.

“புரோட்டோன் 1” என்ற எண்ணைக் கொண்டிருக்கும் அந்நீல நிறப் புரோட்டான் சாகா, சுல்தான் இஸ்கண்டாருக்கு, 1985-ஆம் ஆண்டில் மகாதீர் முதலாவதாக பிரதமர் பதவியை வகித்தபோது பரிசளித்தது என பெர்னாமா செய்தி குறிப்பிட்டிருந்தது.