Home வணிகம்/தொழில் நுட்பம் பயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது!

பயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது!

1734
0
SHARE
Ad

பிரிட்டன்: பிராய்வசி இண்டர்நேஷனல் (Privacy International) எனும் பிரிட்டனின், உலகளாவிய தனியுரிமைக்கு ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், முகநூல் கணக்கை வைத்திருக்காத நபரின் விபரங்களையும், முகநூல் நிறுவனம் சேகரித்து வைத்துக் கொள்வதாகக் குறிப்பிடுகிறது.

‘How Apps On Android Share Data With Facebook (Even If You Don’t Have A Facebook Account)’ , தலைப்பினைக் கொண்ட அவ்வாய்வு, முகநூல் நிறுவனம், அவ்விணைப்பை பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர், மற்றும் பயன்படுத்துவதிலிருந்து வெளியேறிவர்களின் விபரங்களை முகநூல் வணிகக் கருவிகள் (Facebook Business Tools) மூலம் பெற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

பயன்பாடு மேம்பாட்டாளர்கள், பயனர்களின் தரவுகளை, முகநூல் மென்பொருள் மேம்பாட்டு சாதனம் (Software Development Kit) வழியாகப் பகிர்ந்து கொள்வதாகவும், அதன் வாயிலாக, குறிப்பிட்ட ஓர் இயக்க முறைமைக்கான பயன்பாடுகளை உருவாக்க மேம்பாட்டாளர்களுக்கு உதவுவதாகவும் அவ்வாய்வு குறிப்பிடுகிறது.

#TamilSchoolmychoice

உதாரணமாக, குறிப்பிட்ட ஓர் இணையத்தளம் மூலமாக, முகநூல் விருப்பு பட்டனை ஒருவர் அழுத்தும் பொழுது, அவருடைய விபரங்கள் தானாகவே முகநூல் நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பிராய்வசி இண்டர்நேஷனல் 34 அன்ட்ரோய்ட் பயன்பாடுகளை,  ஆய்வு செய்துப் பார்த்ததில், அவற்றில் 24 பயன்பாடுகள் முகநூலுக்குப் பயனரின் விபரங்களை அனுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.