Home வணிகம்/தொழில் நுட்பம் முகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு

முகநூல், வாட்ஸ்எப், இன்ஸ்டாகிராம் – செயல்பாடு உலகம் முழுவதும் பாதிப்பு

1031
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கோடிக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களின் செயல்பாடுகள் இன்று உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாயின.

இதனைத் தொடர்ந்து மலேசியாவிலும் பல பயனர்கள் மேற்கண்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாயினர்.

சில மலேசியர்கள் தொடக்கத்தில் இது உள்ளூர் இணையச் சேவைகளில் ஏற்பட்ட தடைகள் என நினைத்தனர். எனினும் இந்த மூன்று சமூக ஊடகத் தளங்களிலும் தடைகள் ஏற்பட்டு வருகின்றன என ஊடகங்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கியதைத் தொடர்ந்து பயனர்கள் இது அந்த சமூக ஊடகங்களினால் ஏற்பட்ட பாதிப்பு என்பதை உணரத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்எப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் ஒரே நிறுவனத்தின் ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து பயனர்கள் டுவிட்டர் சமூக ஊடகத்தில் தங்களின் ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் கொட்டித் தீர்த்தனர்.

பேஸ்புக் நிறுவனம் டுவிட்டர் தளத்தையும் வாங்க முயற்சி செய்யக் கூடாது என்ற கருத்தில் பலர் கடுமையாகச் சாடினர்.

சுமார் இரண்டு மணி நேர தடைகள் – இடையூறுகளுக்குப் பின்னர் மேற்கண்ட மூன்று சமூக ஊடகங்களின் செயல்பாடுகளும் முறையாகச் செயல்படத் தொடங்கின.