Home நாடு ஜோகூர் புதிய மந்திரி பெசார் – டாக்டர் சாருடின் பின் ஜமால்

ஜோகூர் புதிய மந்திரி பெசார் – டாக்டர் சாருடின் பின் ஜமால்

754
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில மந்திரி பெசாராக இன்று டாக்டர் சாருடின் பின் ஜமால் ஜோகூர் சுல்தானால் நியமிக்கப்பட்டார்.

இதன் தொடர்பில் ஜோகூர் சுல்தான் விடுத்த அதிகாரபூர்வ அறிக்கையில் புதிய மந்திரி பெசார் நேர்மையாகவும், உண்மையுடனும், அவர் மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு ஏற்பவும் நடந்து கொண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் நலன்களையும், மக்களின் நலன்களையும் முன்னிறுத்தி செயல்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தேவையற்ற விவாதங்களிலும், சர்ச்சைகளிலும் ஈடுபடுத்திக் கொள்ளாமல் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியிலும் நாட்டின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி புதிய மந்திரி பெசார் செயல்பட வேண்டும் என்றும் சுல்தான் அறிவுறுத்தினார்.