இதற்கிடையில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அடுத்து வெளிவரப்போகும் ‘காப்பான்’ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய நேரப்படி இரவு 9.30 மணியளவில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட அடுத்த 12 மணி நேரத்திற்குள் சுமார் 25 இலட்சம் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ‘காப்பான்’ ஈர்த்துள்ளது.
காவல் துறையின் உயர்நிலை துப்பறியும் அதிகாரி போன்ற தோற்றத்தில் வரும் சூர்யாவின் அதிரடி சண்டைக் காட்சிகள், பிரம்மாண்டமான இரயில் காட்சிகள், வெடிகுண்டு தகர்ப்புகள் என நகரும் இந்த முன்னோட்டத்தில் சூர்யா விவசாயி போன்றும், ஒரு முஸ்லீம் போன்றும் பல்வேறு மாறுவேடங்களில் காட்சி தருகின்றார்.
படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“காப்பான்” படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: