ஆயினும், இந்த நடவடிக்கையானது அக்கட்சியின் உறுப்பினர்களிடையே எழுந்துள்ள தோல்வி பயத்தினை வெளிப்படுத்துவதாக மக்கள் சமூக ஊடகங்களில் கருத்துரைத்து வருகின்றனர். தோல்வின் பயம் ஒருவனை தாக்கும் பொழுதுதான், அவன் தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள, வன்முறையைக் கையில் எடுப்பான் என ஒரு சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
இம்மாதிரியான சம்பவங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், எந்தவொரு நபரும் தங்களின் முரட்டுத்தனமான போக்கினை வெளிப்படுத்துவதற்கு அவ்விடத்தில் குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை என்றும் அன்வார் இப்ராகிம் தெளிவுப்படுத்தியிருந்தார்.
டாக்டர் ஶ்ரீராமை ரந்தாவ் சட்டமன்றத்தில் நிறுத்துவதற்கு ஆரம்பக்கட்டத்திலிருந்தே எதிர்ப்புகள் அதிகம் இருந்து வந்தன. அவற்றை, கடந்தும் அன்வார், ஶ்ரீராமை களத்தில் இறக்கினார். வழக்கத்திற்கு மாறாக, அன்வார் ரந்தாவில் அதிகமான பிரச்சாரக் கூட்டங்களில் பங்கெடுத்தார்.
அண்மையில், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி எதிர்பாராதத் தோல்வியைத் தழுவியது. அதனையடுத்து, பிகேஆர் கட்சி அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், பிகேஆர் கட்சியைச் சார்ந்த ஐந்து ஆடவர்கள், காவல் துறையினரின் வாகங்களைப் பரிசோதனை செய்தக் காணொளி சமூக ஊடங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு ஆடவர்களை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இதனிடையே, தோல்வியின் உச்சத்தில் நம்பிக்கைக் கூட்டணி தற்போது இருந்து வருகிறது என பொது மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். நம்பிக்கைக் கூட்டணி தங்களின் செய்லபாட்டுகளை மாற்றியமைக்காவிட்டால் இம்மாதிரியான போக்கு தொடர்ந்து நடக்கும் எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.