ஐதராபாத் – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் முபீன் அகமட் (வயது 26) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூன் 4-ம் தேதி, மாலை 6 மணியளவில், அவர் பகுதி நேரமாகப் பணியாற்றி வந்த கடை ஒன்றில் இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகின்றது.
தற்போது சுயநினைவின்றி, மோசமான நிலையில், முபீன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில், முபீனின் தந்தை முஜீப் கூறுகையில், “மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்னுடைய மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். நாங்கள் அவருடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, முஜீப், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், என்ஆர்ஐ விவகாரங்களுக்கான அமைச்சர் கே.டி. ராமா ராவின் உதவியை நாடியிருக்கிறார்.