Home Featured உலகம் மூடநம்பிக்கை எதிரொலி: வழுக்கைத் தலை ஆண்களைக் கொல்லும் கும்பல்!

மூடநம்பிக்கை எதிரொலி: வழுக்கைத் தலை ஆண்களைக் கொல்லும் கும்பல்!

1084
0
SHARE
Ad

baldமொசாம்பிக் – ஆப்பிரிக்க நாட்டின் மொசாம்பிக் என்ற இடத்தில், அடுத்தடுத்து இரண்டு வழுக்கைத் தலை ஆண்கள் மாயமாகினர்.

காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில், அவர்கள் இருவரும் ஒரே முறையில் கொலை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவர்களின் வழுக்கைத் தலை வெட்டப்பட்டு, அதிலிருந்து பாகங்கள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் பிணமாகக் கிடந்தனர்.

#TamilSchoolmychoice

காவல்துறையினர் மேலும் நடத்திய விசாரணையில், வழுக்கைத் தலையோடு இருக்கும் திருமணமாகாத ஆண்கள் பணக்கார யோகம் கொண்டவர்கள் என்று நம்பிய கும்பல் ஒன்று, அவர்களைக் கொலை செய்து சில சடங்குகளை நடத்தியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இன்னும் அக்கும்பலைப் பிடிக்காத நிலையில், வழுக்கைத் தலையுடன் இருக்கும் அப்பகுதி ஆண்களை எச்சரிக்கையாக இருக்கும் படி மொசாம்பிக் காவல்துறை அறிவித்திருக்கிறது.