Home One Line P2 ஆப்பிரிக்காவில் இளம் பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் பெரிய அலையாக மாறுகிறது!

ஆப்பிரிக்காவில் இளம் பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் பெரிய அலையாக மாறுகிறது!

803
0
SHARE
Ad

கம்பாலா, உகாண்டா: கொரொனாவைரஸ் உலகின் பெரும்பகுதி முழுவதும் பரவுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றொரு வகையான பாதிப்பால் அச்சுறுத்தப்பட்டன.

70 ஆண்டுகளில் சில நாடுகள் கண்ட மிகப்பெரிய வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி ஆளானது.

#TamilSchoolmychoice

இப்போது அதன் இரண்டாவது அலை மீண்டும் தீவிரமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. முதல் அலையை விட இது 20 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பருவக்கால மழையுடன் வளரும் புதிய தாவரங்களைத் தேடி சோமாலியாவில் உள்ள இனப்பெருக்கம் செய்யும் இடங்களிலிருந்து பில்லியன்கணக்கான இளம் பாலைவன வெட்டுக்கிளிகள் வருகின்றன.

ஏற்கனவே, நோயால் பாதிக்கப்படக்கூடிய மில்லியன் கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர். வெட்டுக்கிளிகளை எதிர்த்துப் போராட அவர்கள் கூடிவருகையில், அது கொவிட்-19 நோய்த்தொற்றை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் பற்றிதான் “எல்லோரும் பேசுகிறார்கள்” என்று உகாண்டாவில் விவசாயி யோவரி அபோக்கெட் கூறினார்.

“அவை உங்கள் தோட்டத்தில் இறங்கியதும் மொத்த அழிவைச் செய்யும். கொரொனாவைரஸை விட வெட்டுக்கிளிகள் மிகவும் அழிவுகரமானவை என்று சிலர் உங்களுக்குச் சொல்வார்கள். வைரஸ் இங்கு வந்து சேரும் என்று நம்பாத சிலர் கூட இருக்கிறார்கள்.” என்று அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எப்ஏஓ) வெட்டுக்கிளி பாதிப்பு என்பது காலநிலை மாற்றத்தால் ஏற்படுகின்றது என்று கூறியுள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு “முன்னோடியில்லாத அச்சுறுத்தல்” ஆகும்.

“கிழக்கு ஆபிரிக்காவின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது. கென்யா, தெற்கு எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய அலைகள் உருவாகின்றன” என்று எப்ஏஓ மதிப்பீடு தெரிவித்துள்ளது.