Home One Line P2 மே 3-ஆம் தேதிவரை இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

மே 3-ஆம் தேதிவரை இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு

682
0
SHARE
Ad

புதுடில்லி – இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு தொலைக்காட்சி அலைவரிசைகளின்வழி நேரலையாக உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொவிட்-19 காரணமாக, இந்தியா முழுவதுமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எதிர்வரும் மே 3-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

மே 3 வரை உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் பயணங்களும் இந்தியாவின் தடை செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவைக் காப்பாற்ற துணை நிற்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மோடி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மிகக் கடுமையாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று கூறிய மோடி, ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு கொவிட்-19 அபாயம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் அனுமதிக்கப்படலாம் என கோடி காட்டினார்.

இதற்கிடையில் இந்தியாவில் கொவிட்-19 மரண எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 10,363 ஆக உயர்ந்துள்ளது.