Home Featured நாடு ஜூலை 17 முதல் சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி முழுமையான இயக்கம்!

ஜூலை 17 முதல் சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி முழுமையான இயக்கம்!

918
0
SHARE
Ad

MRT1_train

புத்ராஜெயா – வரும் ஜுலை 17-ம் தேதி, சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி சேவை முழுவதுமாக இயக்கத்திற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறுகையில், “கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி முதல், எம்ஆர்டி சேவையின் ‘ஃபேஸ் 1’ எனப்படும் முதல் கட்டம் இயக்கப்பட்டு வருகின்றது. வரும் ஜூலை மாதம் முதல் ஃபேஸ் 2 எனப்படும் இரண்டாம் கட்டம் சுங்கை பூலோவிலிருந்து காஜாங் வரை 51 கிலோமீட்டர் முழுவதுமாக இயக்கப்படவிருக்கிறது” என்றார்.

#TamilSchoolmychoice

“அதனைத் தொடங்கி வைக்க நான் ஒரு சிறப்பு நாளையும் தேர்வு செய்துவிட்டேன். அது வரும் ஜூலை 17.7.17” என்று நஜிப் இன்று வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இந்த எம்ஆர்டி சேவை மூலம் 500,000 பேர் பயனடைவார்கள் என்றும், இது தேசிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.