Home Featured உலகம் கலிபோர்னியா அணை உடையும் அபாயம்: லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்!

கலிபோர்னியா அணை உடையும் அபாயம்: லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்!

797
0
SHARE
Ad

California damலாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் மிகப் பெரிய அணையான ஓரோவில் அணை உடையும் நிலையில் இருப்பதால், உடனடியாக அந்த அணையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 160,000 மக்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள்.

அணையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட அரிப்பின் காரணமாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், எப்போது வேண்டுமானாலும் அது முற்றிலுமாக உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.