Home Featured கலையுலகம் ஃபாப்டா விருது 2017: தேவ் பட்டேல் ‘சிறந்த துணை நடிகர்’ விருது பெற்றார்!

ஃபாப்டா விருது 2017: தேவ் பட்டேல் ‘சிறந்த துணை நடிகர்’ விருது பெற்றார்!

698
0
SHARE
Ad

Dev patelலண்டன் – ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ புகழ் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் நடிகரான தேவ் பட்டேலுக்கு, ஃபாப்டா அனைத்துலக திரைப்பட விருது விழாவில், ‘லயன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ‘சிறந்த துணை நடிகர்’ விருது வழங்கப்பட்டது.

மேலும், இந்த விருது விழாவில், ‘லா லா லேண்ட்’ திரைப்படம் சிறந்தபடம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

அதன்படி, சிறந்த இயக்குநராக டேமியன் சாலேவும், சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோனும், சிறந்த இசையமைப்பாளராக ஜஸ்டின் ஹார்விட்சும், சிறந்த ஒளிப்பதிவாளராக லைனஸ் சாண்ட்கிரனும் ‘லா லா லாண்ட்’ திரைப்படத்திற்காக விருதுகளை வென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

‘மான்செஸ்டர் பை தி சீ’ சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கேசி அப்லக்கிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.