Home Featured தமிழ் நாடு மாலைக்குள் நல்ல முடிவு – அதிமுக செய்தித் தொடர்பாளர் நம்பிக்கை!

மாலைக்குள் நல்ல முடிவு – அதிமுக செய்தித் தொடர்பாளர் நம்பிக்கை!

706
0
SHARE
Ad

sasikala-panner-சென்னை – இன்று திங்கட்கிழமை மாலைக்குள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நல்ல முடிவை அறிவிப்பார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், 7 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து பன்னீர் செல்வம் ஆட்சியமைக்க முடியாது என்றும் வைகை செல்வம் விமர்சித்திருக்கிறார்.

ஓ.பி.எஸ், சசிகலாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த தற்போதைய செய்திகள்:-

#TamilSchoolmychoice

1.தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தலைமைச் செயலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு இதுவரை 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 6 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

2. பன்னீரைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தலைமைச் செயலகம் செல்கிறார். அவருடன் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும் செல்கின்றனர்.

3. முன்னதாக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

4. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தற்போது, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கச் செல்வதாகக் தகவல்கள் கூறுகின்றன.

5. சட்டமன்ற உறுப்பினர்களை மீட்கக் கோரி டிராபிக் இராமசாமி தொடுத்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அறிவித்தது.

-செல்லியல் தொகுப்பு