Home இந்தியா ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது

ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது

462
0
SHARE
Ad

சென்னை : கடந்த பொதுத் தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதிமுக இணை பொதுச் செயலாளராக இருந்து இப்போது கட்சியில் இருந்து விலக்கப்பட்டிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்தான் ரவீந்திரநாத்.

அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எதுவாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்திவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.