Home Featured கலையுலகம் நவம்பர் 26-ல் டெர்மினேட்டரை சந்திக்க இருக்கும் சிட்டி!

நவம்பர் 26-ல் டெர்மினேட்டரை சந்திக்க இருக்கும் சிட்டி!

692
0
SHARE
Ad

arnold-rajiniசென்னை – கபாலியின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வரும் நிலையில், எந்திரன் இரண்டாம் பாகத்திற்காக இயக்குனர் சங்கரும், நடிகர் ரஜினிகாந்தும் வரும் 26-ம் தேதி  அமெரிக்கா பயணப்பட இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்த் மற்றும் சங்கரின் இந்த அமெரிக்க பயணத்தின் மிக முக்கியக் காரணம், எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்திப்பதற்காகத் தான் என்று கூறப்படுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பிற்கு பிறகு அர்னால்ட் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே கபாலி குறித்த அறிவிப்புகளும் ரஜினியின் தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினியுடன் ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் அர்னால்ட் நடிக்க இருப்பது அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.